ADDED : ஏப் 13, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கைக்கிலப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், லட்சதீப விழா, திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 33ம் ஆண்டு மகோற்சவ லட்சதீப விழா நாளை (14ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு லச்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சாந்தகாப்பு அலங்காரம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சீதை, ராமர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை மற்றும் குளக்கரை சுற்றிலும், லட்ச தீப விழா நடக்கிறது. இதேபோல், வாதானுார், கூனிச்சம்பட்டு, கொடுக்கூர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலிலும் லட்சதீப விழா நாளை நடக்கிறது.

