/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை லட்சுமிகாந்தன் கோரிக்கை
/
மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை லட்சுமிகாந்தன் கோரிக்கை
மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை லட்சுமிகாந்தன் கோரிக்கை
மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை லட்சுமிகாந்தன் கோரிக்கை
ADDED : ஆக 13, 2024 05:12 AM
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் பகுதியில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:
கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் பகுதிகளில் கடந்த 10 நாட்கள் கடுமையான டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி தான் மர்ம காய்ச்சல் இப்பகுதியில் ஏற்படுகிறது. குடும்பம் குடும்பமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு காய்ச்சல் ஆரம்பித்துள்ளது. இந்த விஷயத்தினை சுகாதார துறை தனி கவனம் செலுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும்.
பருவமழை துவங்கியுள்ளது. சுகாதார துறை, உள்ளாட்சி வாயிலாக கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.