ADDED : மே 31, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: முதலியார்பேட்டை, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன், 28; வக்கீல். பி.ஆர்.டி.சி., நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணி செய்து வருகிறார். இவர் உறவினரின் பைக்கை பயன்படுத்தி வந்தார். கடந்த 19ம் தேதி பி.ஆர்.டி.சி., அலுவலக வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு பஸ்சில் வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.