/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து பெற இண்டியா கூட்டணி குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சிவா உறுதி
/
மாநில அந்தஸ்து பெற இண்டியா கூட்டணி குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சிவா உறுதி
மாநில அந்தஸ்து பெற இண்டியா கூட்டணி குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சிவா உறுதி
மாநில அந்தஸ்து பெற இண்டியா கூட்டணி குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சிவா உறுதி
ADDED : ஆக 15, 2024 04:47 AM
புதுச்சேரி: சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தனிநபர் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:
சென்ற காலங்களில் பல முறை மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசு எதற்கும் செவிசாய்க்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
யூனியன் பிரதேசங்களான இமாச்சல் பிரதேசம், மிசோராம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், கோவா ஆகியன மாநிலங்களாக மாற்றம் அடைந்து நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. அந்த வழியிலே புதுச்சேரி யூனியன் பகுதிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் வளர்ச்சியடைந்து இருக்கும்.
சட்டசபையில் இயற்றப்படுகின்ற அனைத்து மசோதாக்களுக்கும் முன்அனுமதி பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் முடக்கப்பட்டு இருக்கிறது. கவர்னரிடம் அனைத்து கோப்புகளுக்கும் ஒப்புதல் பெறும் நிலையால் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு காலதாமதம் ஏற்படுகிறது.
அதிகாரிகள் முழுமையாக கவர்னரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. உண்மையான ஜனநாயகம் தழைக்க மாநில அந்தஸ்து மட்டுமே வழிவகுக்கும். மத்திய அரசு புதுச்சேரியை வஞ்சிக்காமல் மாநில அந்தஸ்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்த அரசு தொடர்ந்து போராட வேண்டும்.
முதல்வர் இம்முறை மாநில மக்களின் குரலாக அரசு தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு கொண்டு சென்று தர வேண்டும். இதற்கு இண்டியா கூட்டணி குரல் கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.