UPDATED : செப் 10, 2026 08:36 PM
ADDED : செப் 10, 2026 08:22 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு, இந்திய கம்யூ., சார்பில் த.வெ.க.,விடம் கடிதம் அளித்துள்ளனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., மற்றும் தி.மு.க., தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி, பணிகளை துவக்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், இந்திய கம்யூ., கட்சியும் தற்போது தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய கம்யூ., கட்சி சென்னையில் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சந்திப்பில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதன், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளளார் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் எல்லைசிவக்குமார், அந்தோணி, எழிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில், புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து அமைச்சர் ஆனந்துடன் இந்திய கம்யூ., நிர்வாகிகள் விரிவாக கலந்துரையாடினர்.
