/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி20 கிரிக்கெட் இறுதி போட்டி லயன்ஸ், டைகர்ஸ் அணிகள் இன்று மோதல்
/
டி20 கிரிக்கெட் இறுதி போட்டி லயன்ஸ், டைகர்ஸ் அணிகள் இன்று மோதல்
டி20 கிரிக்கெட் இறுதி போட்டி லயன்ஸ், டைகர்ஸ் அணிகள் இன்று மோதல்
டி20 கிரிக்கெட் இறுதி போட்டி லயன்ஸ், டைகர்ஸ் அணிகள் இன்று மோதல்
ADDED : மார் 06, 2025 04:03 AM

புதுச்சேரி: கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி, டி.சி.எம். நிறுவனம் சார்பில் நடக்கும் டி20 இறுதி போட்டியில், லயன்ஸ் அணியும், டைகர்ஸ் அணியும் மோதுகின்றன.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில் டி20 போட்டிகள் கடந்த 24ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், ஷார்க்ஸ், லயன்ஸ், புல்ஸ், டைகர்ஸ், பாந்தர்ஸ், மற்றும் டஸ்கர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஐ.பி.எல். முறையில், எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 1, 2 என்ற முறையில் நாக் அவுட் போட்டிகள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர் 1 போட்டியில் லயன்ஸ் அணியும், டைகர்ஸ் அணியும் மோதின. இதில் டைகர்ஸ் அணி 3 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதேபோல், எலிமினேட்டர் போட்டியில் ஷார்க்ஸ் அணியும், டஸ்கர்ஸ் அணியும் மோதின. டைகர்ஸ் ஆணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று (5ம் தேதி) நடந்த குவாலிபையர் 2 போட்டியில் டஸ்கர்ஸ் அணியும், லயன்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 187 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, ஆடிய லயன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 3 விக்கெட் எடுத்த லயன்ஸ் அணியின் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இன்று (6ம் தேதி) காலை 11:00 மணிக்கு லயன்ஸ் அணியும், டைகர்ஸ் அணியும் இறுதி போட்டியில் மோதுகிறது,