/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார் பகுதிக்கு கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்
/
கடலுார் பகுதிக்கு கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 10, 2024 01:38 AM
பாகூர் : பாகூர் பகுதியில் தமிழகத்திற்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகூர் போலீசார் நேற்று கொம்மந்தமேடு எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை தமிழக பகுதிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, பைக்கில் வந்தவரிடம் விசாரணை் நடத்தியதில், கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஞானமணி, 30; என்பதும், அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் பாகூர் ஏரிக்கரை பகுதியில் 5 லிட்டர் சாராய பாக்கெட்டுகள், கிருமாம்பாக்கம் உச்சிமேடு மதிகிருஷ்ணா புரம் பகுதியில் 17 மது பாட்டில்கள், 12 லிட்டர் சாராயம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

