/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்
/
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 09, 2024 05:06 AM

பாகூர்: தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானம் வழங்குவதை தடுக்கும் வகையில், கலால் துறையும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பரிக்கல்பட்டு சாலையில், போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றார்.
போலீசார் அந்த பையை சோதனை செய்தபோது அதில் (90 மில்லி) கொண்ட 78 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் 5 ஆயிரம் ஆகும். போலீசார் அதனை பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர். இதேபோல், கரையாம்புத்துார் போலீசார் மணமேடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசாரை கண்டதும், வாலிபர் ஒருவர் பையை கீழே வீசி விட்டு தப்பிச் சென்றார். அதனை சோதனை செய்த போது, (180 எம்.எல்) கொண்ட 50 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
போலீசார் அதனை பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர்.

