ADDED : மே 15, 2024 01:01 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் சாராய வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர் போலீசார் கடந்த 28ம் தேதி ரோந்து சென்றபோது, காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே 120 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த சின்ன காரைக்காடு பாலகிருஷ்ணன், 60; என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே 4 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, பாலகிருஷ்ணனை தடுப்பு காவலில் கைது செய்த கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் பாலகிருஷ்ணனிடம் நேற்று வழங்கப்பட்டது.
