/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது: போலீசார் எச்சரிக்கை
/
பொது இடத்தில் மது: போலீசார் எச்சரிக்கை
ADDED : ஏப் 30, 2024 05:26 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்தியவர்களை பிடித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மது அருந்துவதை தடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பொது இடங்களில் மது அருந்தியதுடன், பொது மக்களுக்கு இடையூராக குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.
பின்னர், அவர்களிடம் பொது இடங்களில் மது அருந்துவதால், ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இனி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

