/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்லைப் பகுதியில் மது விற்பனை 'ஜோர்'
/
எல்லைப் பகுதியில் மது விற்பனை 'ஜோர்'
ADDED : ஏப் 18, 2024 11:38 PM
பாகூர் : புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்கள், மதுபானம் வழங்குவதை தடுக்க தேர்தல் துறை, காவல் துறை, கலால் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, பறிமுதல் செய்து வருகின்றனர்.
இன்று ஓட்டுப் பதிவு நடைபெற உள்ள நிலையில், காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீசார் பெரும்பாலானோர், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டனர்.
இதனால், உள்ளூரில் ரோந்து பணிகளை மேற்கொள்ள போலீசார் இல்லை. இது போன்ற சூழ்நிலையை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் மது கடத்தல் மற்றும் மது, சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

