/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளிப்பு
/
சாராயக்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளிப்பு
சாராயக்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளிப்பு
சாராயக்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளிப்பு
ADDED : ஜூலை 30, 2024 05:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி சாராயக்கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கலால் துறை துணை ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த வாரம் கெங்கராம்பாளையம் சோதனை சாவடியில் நடந்த போலீஸ் சோதனையில், விழுப்புரத்தைச் சேர்ந்த இருவர் 5 பாக்கெட் சாராயம் கொண்டு சென்றது தெரியவந்தது.
இருவரும் ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் சாராயம் வாங்கி வந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில், தமிழக போலீசார் ஆண்டியார்பாளையம் சாராய கடையில் ரெய்டு நடத்தி, 1200 சாராய பாக்கெட், சாராயம் பாக்கெட் செய்யும் மிஷின் பறிமுதல் செய்ததுடன், காசாளர் பிரேமானந்தன், 53; கைது செய்து கொண்டு சென்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி கற்பக விநாயகர் கள்ளுக்கடை, சாராயக்கடை உரிமையாளர் சங்கத்தினர் நேற்று கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ்யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, அரசு அனுமதியுடன் மாத கிஸ்தி செலுத்தி சாராய கடை நடத்தி வருகிறோம். ஒரு நபருக்கு 4 லிட்டர் வரை சாராயம் வழங்கலாம் என்ற விதி உள்ளது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட பாக்கெட் முறை கூடாது என்ற உத்தரவு காலாவதி ஆகி விட்டது. புதுச்சேரியில் சாராயம் விற்பனை செய்வோரை கைது செய்வது தவறானது. சாராய கடைகளுக்கு சில்லரையாக கேன்களில் சாராயம் வழங்குவதிற்கு பதில், பாட்டில் போன்று பாக்கெட் சாராயம் அரசே வழங்கலாம். சாராயம் விற்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு கருதினால், அனைத்து கடைகளின் லைசன்ஸ்சை ரத்து செய்து விடலாம் என தெரிவித்தனர். கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்; சாராயம் பாக்கெட்டில் அடைத்து விற்பது தொடர்பாக அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.