/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு கவுரவ நிதியுதவி வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பு
/
விவசாயிகளுக்கு கவுரவ நிதியுதவி வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பு
விவசாயிகளுக்கு கவுரவ நிதியுதவி வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பு
விவசாயிகளுக்கு கவுரவ நிதியுதவி வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பு
ADDED : பிப் 25, 2025 05:04 AM

புதுச்சேரி: பீகார் மாநிலம், பகல்பூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விவசாயிகளுக்கான கவுரவ நிதியுதவி வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி வேளாண் துறை மூலம் நேற்று நடந்தது.
காமராஜர் மணிமண்டபத்தில் நடத்த நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய மினிகிட் மற்றும் பழமரக்கன்றுகள் வழங்கினார்.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, வாழ்த்தி பேசினார். இதில், அமைச்சர் ஜெயக்குமார், துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் வசந்தகுமார், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார், கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகிர் உசேன், தோட்டக்கலை பிரிவு இணை இயக்குனர் சண்முகவேலு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ நிதியின் 19வது தவணையாக, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 8,015 பேருக்கு, தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உயிரியல் காரணிகள், சிறுதானிய உணவு வகைகள், இயற்கை வேளாண்மை பொருட்கள் கண்காட்சி நடந்தது.