ADDED : ஜூலை 25, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி அரிக்கமேடு போர்ட் ஹோலஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர் மற்றும் தேவி மெடிக்கல்ஸ் இணைந்து இலவச கல்லீரல் மருத்துவ முகாமை மணவெளி அரிச்சுவடி மனநல மையத்தில் நடத்தின.
அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் இளவழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ராமு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவர்கள் நவசக்தி, கலையரசி, சாய்தர்ஷினி, சத்தியவண்ணன், கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கல்லீரல் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
கோதை சதீஷ்குமார், முத்துகாமட்சி, வெண்ணிலா உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர். அரசமாதேவி நன்றி கூறினார்.
