/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோன் வாங்கி தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை
/
லோன் வாங்கி தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 12, 2024 04:31 AM
புதுச்சேரி : லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
முதலியார்பேட்டை திரு.வி.க.நகரை சேர்ந்தவர் ரஞ்சினி, இவர் அதே பகுதி பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்தியா 38, செந்தில்குமார் 42, ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்தியா, ரஞ்சினியிடம் உனக்கு குழு லோன் ரூ. ௧.௭௦ லட்சம் வாங்கி தருவதாக கூறி, 22 பவுன் தங்க நகை, ரூ. 1.45 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தராமால் ஏமாற்றி வந்தனர். கொடுத்த பணத்தை கேட்ட ரஞ்சினியை சத்தியா, செந்தில்குமார் ஆகியோர் கொலை செய்துவிடுதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ரஞ்சினி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

