தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு துளிகள்

லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு துளிகள்

லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு துளிகள்


ADDED : ஏப் 20, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி தேர்தல் துறை நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்குவதற்கு முன், காலை 6:00 மணி முதல் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஓட்டுபோட அழைப்பு விடுத்தது. மதியம் 2:00 மணி, மதியம் 3:00 மணிக்கு வாக்காளர்களுக்கும் மீண்டும் நினைவூட்டியது.

வேட்பாளரின் தாத்தா, பாட்டி


அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் தாத்தா கோதண்டபாணி, 89; பாட்டி, கிருஷ்ணம்மாள், 86, ஆகியோர் வீராம்பட்டினம் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓட்டுப் போட்டனர். அவர்களை வாக்காளர்கள் பாராட்டினர்.

முன்னாள் பெண் எம்.எல்.ஏ.,


கடந்த காங்.,ஆட்சியில் 1991-96 எம்.எல்.ஏ., பக்கிரியம்மாள், 74, அபி ேஷக பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலையில் பள்ளியில் ஓட்டளித்தார்.

அவர், கூறுகையில், 'ஜனநாயக திருவிழாவில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.

ஓட்டுப்போடாத கைதிகள்


புதுச்சேரி மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர்.

இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க உரிமை இல்லை. இருப்பினும் குண்டாஸ் கைதிகள் ஓட்டுப்போட உரிமை உண்டு. ஆனால் காலாப்பட்டு மத்திய சிறையில் குண்டாஸ் கைதிகள் யாரும் ஓட்டளிக்கவில்லை,

இது குறித்து சிறை காவலர்கள் கூறுகையில், 'குண்டாஸ் கைதிகள் மட்டுமே ஓட்டளிக்க உரிமை உண்டு. சிறையில் இருந்த ஒரே குண்டாஸ் கைதியும் அண்மையில் விடுதலைகிவிட்டார். இதனால், சிறை கைதிகள் யாரும் ஓட்டளிக்கவில்லை' என்றனர்.

'செல்பி பாயிண்ட்'


பாரம்பரிய ஓட்டுச்சாவடியான வ.உ.சி. பள்ளியில் ஓட்டுபோட்டவர்கள் செல்பி எடுக்க பனை ஓலைகளால் சிறகை விரிக்கும் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், வாக்காளர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இங்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்டு இருந்த மாதிரி ஓட்டுச்சாவடிகள் முன் நின்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us