தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

லாட்டரி சீட்டு விற்றவர் கைது 


ADDED : மே 13, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருவண்டார்கோவிலில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை உதவி சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவண்டார்கோவில் சாராயக்கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்க சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், தடை செய்யப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

விசாரணையில் கொத்தபுரிநத்தம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜானகிராமன், 57; என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜானகிராமனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன், 1,170 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ஜானகிராமனை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us