/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டு கோவில் தேர் திருவிழா
/
மதகடிப்பட்டு கோவில் தேர் திருவிழா
ADDED : மார் 23, 2024 06:15 AM

திருபுவனை : மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
புதுச்சேரி, மதகடிப்பட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சாகை வார்த்தல், அய்யனாரப்பனுக்கு ஊரணிப்பொங்கல், இரவு 7:00 மணிக்கு கொடியேற்றம், அம்மன் வீதியுலா நடந்தது.
தினமும், சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
கடந்த 20ம் தேதி இரவு குடல் பிடுங்கி மாலை அணிதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பகல் 12.00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம், இரவு 10:00 மணிக்கு அக்னி கரம் வீதியுலா நடந்தது.
நேற்று பகல் 12:05 மணிக்கு அங்காளம்மன் தேர் திருவிழா நடந்தது. 9ம் நாள் பிரமோற்சவ உபயதாரர் தி.மு.க., முன்னாள் பகுதி செயலாளர் பழனி, முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா உட்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 4:30 மணிக்கு செடல் திருவிழா நடந்தது.

