/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகிளா காங்., நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டாம்
/
மகிளா காங்., நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டாம்
ADDED : பிப் 22, 2025 04:35 AM
புதுச்சேரி: மகிளா காங்., நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மாநில மகிளா காங்., தலைராக ரகமத்துன்னிஷா (எ) நிஷாவை காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் எம்.பி., நியமனம் செய்தார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்., தலைமைக்கு தெரியாமல் மகிளா காங்., தலைவரை நியமனம் செய்ததை கண்டித்து வைசியால் வீதியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில் மகிளா காங்., நிர்வாகிகள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

