தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு நாடகம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு நாடகம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு நாடகம்


ADDED : மே 14, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நலவழித்துறை, தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மற்றும் லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி தலைமை தாங்கினார். சுகாதார உதவியாளர் கார்த்திகேயன் வரவேற்றார். டாக்டர் வினோத், மலேரியா அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் பத்மநாபன், சுகாதார ஆய்வாளர்கள் மதிவதனன், லில்லி புஷ்ப ராணி மற்றும் தாகூர் கல்லுாரி விலங்கியல் துறை பேராசிரியர் வசந்த ராஜா முன்னிலை வகித்தனர்.

மலேரியா உதவி இயக்குனர் முருகன், மலேரியா விழிப்புணர்வு நாடகத்தை துவக்கி வைத்தார். தாகூர் கல்லுாரி விலங்கியல் துறை மாணவர்கள் மலேரியா நோய் பற்றியும், பரவும் விதம், சிகிச்சை மற்றும் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர் மதியழகன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us