ADDED : ஜூன் 16, 2026 07:51 PM
புதுச்சேரி: தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டம், வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மலேரியா விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் தேவசேனா, விரிவுரையாளர் ரமணா மற்றும் உடற்பயிற்சி விரிவுரையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை, மலேரியா நோயின் அறிகுறிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தார். சுகாதார ஆய்வாளர் இளையதாசன் நோய் பரவாமல் தடுப்பது குறித்தும், மழைக்காலங்களில் எவ்வாறு மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், விமல், கலையரசி செய்திருந்தனர்.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் நன்றி கூறினார்.
