காங்., வேட்பாளரை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம்
காங்., வேட்பாளரை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 05:57 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். தமிழக அமைச்சர் பொன்முடி, தமிழக காங்., கட்சி தலைவர் செல்வபெருந்தகை,முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ்,எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், சம்பத்,செந்தில்குமார், தி.மு.க., அவை தலைவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர்கள்கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி, இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு,இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., ராஜாங்கம், வி.சி. மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது;இண்டியா கூட்டணி உருவாக முக்கிய காரணம்கார்க்கே. புதுச்சேரி மாநிலத்துக்கு நீண்ட காலமாக இருக்கும் கோரிக்கைமாநில அந்தஸ்து வேண்டும் என்பதை அகில இந்திய காங்.,கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுச்சேரியை போல் காஷ்மீருக்கும் அந்த உரிமைதருவோம் என்று காங்., உறுதி அளித்துள்ளது.இது மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமை கிடைக்கிறதா என்றால் இல்லை. ஓ.பி.சி. மக்களுக்கான குரலாக கார்க்கே உள்ளார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்களுக்கான இடஒதுக்கீடு தருவோம் என காங்., தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் அந்த நிலைப்பாடு உள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரமுடியும் என்ற வழிகாட்டியாக கர்நாடகா வந்துள்ளது.மீனவ சமூகத்தினரைபழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயற்சி எடுக்கிறோம். அதையும் தேர்தல் வாக்குறுதியில் இணைத்துள்ளனர் என கூறினார்.
