ADDED : மே 14, 2026 06:53 PM
சேத்தியாத்தோப்பு: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா, 68; இவரது கணவர் ரங்கசாமி கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக சென்னையில் வசித்து வரும் மகன்கள் குடும்பத்தினரோடு வந்து தங்கியுள்ளனர்.
வீட்டின் முன்புறம் ‘கேட்’ இல்லாத நிலையில் நேற்று இரவு வசந்தா மட்டும் வராண்டாவில் துாங்கினார். அப்போது வீடு புகுந்த குடிபோதை நபர் ஒருவர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகன்கள், போதை நபரை பிடித்து சேத்தியாத்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர், மதுவானைமேடு கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் ராதாகிருஷ்ணன், 47; என்பது தெரிந்தது. இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், போதைக்கு அடிமையாகி சாலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.க்ஷ
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
