தீபாவளி பண்டு சீட்டு பிடித்து ரூ. 42 லட்சம் மோசடி செய்தவர் கைது
தீபாவளி பண்டு சீட்டு பிடித்து ரூ. 42 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : மே 16, 2026 11:12 PM
கடலுார்: தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பரிசு தராமல் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் ஹரிதாஸ், தீபாவளி பண்டு சீட் பிடித்தார். மாதம் 1000 ரூபாய் வீதம் 10 மாதங்கள் கட்டினால் தீபவாளிக்கு 2 கிராம் தங்க நாணயம், பட்டாசு பாக்ஸ், ஸ்வீட் காரம் போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். அதை நம்பி, அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர், 2024ம் ஆண்டில், 420 பேரை பண்டு சீட்டில் சேர்த்துள்ளார்.
மாதம் மாதம் பணம் வசூல் செய்து, 42 லட்சம் ரூபாய், ஹரிதாசிடம் கொடுத்துள்ளார். ஆனால் 2 கிராம் தங்க நாணயம், ஸ்வீட், காரம், பட்டாசு ஆகியவற்றை வழங்கவில்லை. அவரைத்தொடர்பு கொண்டு கேட்டபோது, தருவதாக கூறி வந்தார். ஆனால் இதுவரை பணத்தையும், பரிசையும் வழங்காமல் ஏமாற்றி வந்தார்.
அதனால் காளியப்பன் எஸ்.பி., யிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஹரிதாசை கைது செய்தனர்.
