ADDED : ஜூன் 15, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 36 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாகூர் கூட்டுறவு நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் மற்றும் போலீசார், கூட்டுறவு நகரில் ஆய்வு செய்தனர்.
அங்குள்ள ஒரு வீட்டில் பல்வேறு குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 36 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் 35; என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
