/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மினி லோடு வேன் திருடிய நபர் கைது
/
மினி லோடு வேன் திருடிய நபர் கைது
ADDED : ஆக 18, 2024 04:04 AM

காரைக்கால் காரைக்காலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட மினிலோடு வேனை திருடிசென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை தரங்கம்பாடி ஆயப்பாடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சொந்தமாக மினி லோடு வேன் வைத்து, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காரைக்கால் நாகூர் தேசிய நெஞ்சாலையில் உள்ள ஓட்டலில் தனது நண்பர்களுடன் மணிகண்டன் காலை உணவு சாப்பிப்படபோது, அவரது மினிலோடு வேனை மர்ம நபர் ஒருவர் திருடிசென்றது தெரியவந்தது.
பின்னர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் உதவியோடு விரட்டி சென்றனர். பின், நிரவி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் லோடு வேனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் திருவாரூர் புலிவலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 42, என்பவர் வேனை திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர் மீது நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மினி லோடுவேனை பறிமுதல் செய்தனர்.