ADDED : ஜூன் 25, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 9:45 மணிக்கு, கூட்டேரிப்பட்டு அடுத்த சின்னநெற்குணம் கிராமம் அருகே சென்றபோது, ரயிலில் பயணம் செய்த, 45; வயது மதிக்கத்தக்க ஆண் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்தவர் கட்டம் போட்ட சட்டையும், காவி வேட்டியும், நீல நிறத்தில் பனியன் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
