மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 09, 2026 08:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் இயற்பியல் துறையும், தென் கொரியாவின் சியோவில் உள்ள டோங்குக் பல்கலைகழகத்தோடு புரிந்துண்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கல்லுாரி சார்பில் இயக்குனர் வெங்கடாசலபதி, டோங்குக் பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் சேஜூன் லீ ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையே சர்வதேச கல்வி ஒத்துழைப்பு, மாணனர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி, உள்ளக பயிற்சிகள் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான ஒரு அறிய வாய்ப்பாகும்.
இந்த முயற்சியை தட்சசீலா பல்கலைக்கழகம் வேந்தர் தனசேகரன், ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் பொருளாளர் ராஜராஜன், துணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் கைலாசம், இயற்பியல் துறை தலைவர் உதயகுமார் உட்பட துறை தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
