ADDED : ஜூலை 17, 2026 08:30 PM
நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா நேற்று நடந்தது.
ஏரிப்பாக்கம் பழைய காலனியில் உள்ள விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், முத்து மாரியம்மன், நவக்கிரகங்கள், அங்காளம்மன், பரிவார தேவதைகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷக விழா கடந்த மாதம் 24ம் தேதி நடந்தது.
அன்று முதல் மண்டல அபிேஷகம் துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்று மண்டல அபி ேஷகம் பூர்த்தி விழா நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், கலச பூஜை, திரவியாவதி ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது.
காலை 8:30 மணிக்கு கலசாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அம்மன் மாடவீதியுலா நடந்தது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
