sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்காலில் மாங்கனி திருவிழா பக்தர்கள் கனிகளை வீசி வழிபாடு

/

காரைக்காலில் மாங்கனி திருவிழா பக்தர்கள் கனிகளை வீசி வழிபாடு

காரைக்காலில் மாங்கனி திருவிழா பக்தர்கள் கனிகளை வீசி வழிபாடு

காரைக்காலில் மாங்கனி திருவிழா பக்தர்கள் கனிகளை வீசி வழிபாடு


ADDED : ஜூன் 22, 2024 05:00 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால், : காரைக்கால் அம்மையார் கோவில் நேற்று நடந்த மாங்கனி திருவிழாவில் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் மாம்பழங்களை வீசி நேர்த்திகடன் செலுத்தினர்.

சிவபக்தையான புனிதவதியாரை மணந்த பரமதத்தர் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை அடியார் வேடத்தில் வந்த சிவபெருமானுக்கு புனிதவதி வழங்கினார்.

பின் வீட்டிற்கு வந்த கணவருக்கு மீதமிருந்த மாங்கனியை வழங்கினார். அதனை உண்ட பரமதத்தர், சுவை அதிகமாக இருந்தால் மற்றொரு பழத்தை கேட்கவே, திகைத்த அம்மையார் இறைவனை வேண்டியதும் கையில் மாங்கனி கிடைத்தது. அதை கணவரிடம் வழங்கினார்.

அதனைக்கண்ட பரமதத்தர், நீ தெய்வ பிறவி என்று கூறி பிரிந்து சென்று மதுரையில் வேறு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். கணவனை காண மதுரை சென்ற புனிதவதியாரை கண்ட பரமதத்தர் தனது மனைவி மகளுடன் காலில் விழுந்து வணங்கினார்.

பின் கணவனுக்காக ஏங்கிய உடலை வெறுத்து சிவனிடம் வேண்டி பேய் உருவம் பெற்று கையிலாயம் சென்ற புனிதவதியை, சிவபெருமான், அம்மையே என அழைத்தார். இந்த நிகழ்வை உணர்ந்தும் விதமாக மாங்கனி திருவிழா நடக்கிறது.

இந்தாண்டிற்கான மாங்கனி திருவிழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. மறுநாள் காலை காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு மணக்கோலத்தில் காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது.

நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது.

அப்போது வேண்டுதல் கொண்ட பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து பின் வீட்டின் மாடிகளில் இருந்து மாங்கனிகளை வீசி ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு வணங்கினர்.

விழாவில் அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், தியாகராஜன், கலெக்டர் மணிகண்டன். எஸ்.எஸ்.பி., மனிஷ், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us