/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
/
காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜூன் 20, 2024 03:38 AM

காரைக்கால் : காரைக்கால் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு 100க்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக மூலம் பக்தர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. விழாவில் இன்று காரைக்கால் அம்மையார்,பரமதத்தர் திருகல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை ( 21ம் தேதி) அதிகாலை 3மணிக்கு பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலாவில் பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 30 நாட்கள் திருவிழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது.நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன்,பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் தனி அதிகாரி காளிதாசன் விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் எவ்வித சிரமம் இல்லால் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
எஸ்.பி.,சுப்ரமணியன் கூறுகையில். மாங்கனி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 100 சி.சி.டி.வி.,கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.