/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாரியம்மன் கோவில் செடல் திருவிழா
/
மாரியம்மன் கோவில் செடல் திருவிழா
ADDED : ஜூன் 16, 2024 05:52 AM
புதுச்சேரி: மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது.
வில்லியனுார் அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 11ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், கும்பம் படையல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது.
ஏரளமான பக்தர்கள் அலகு குத்தி தேர், கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.