ADDED : செப் 09, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: வாதானுாரில் மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்தார்.
திருக்கனுார் அடுத்த வாதானுார் காலனி, அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் பூமிநாதன், 50; கொத்தனார். இவரது மனைவி மஞ்சுளா. ஒரு மகன் உள்ளார்.
பூமிநாதன் நேற்று முன்தினம் வீட்டில் பழுதான மின் விளக்கை சரி செய்து கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
துாக்கி வீசப்பட்ட பூமி நாதனை அருகில் இருந்த வர்கள் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பூமிநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.