ADDED : மே 07, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : இறைச்சி கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 42. குப்பநத்தம் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் 1:00 மணியளவில் கடையில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது குடும்பத்தினர் சென்று, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.