தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குருவிநத்தம் கிராமத்தில் மருத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

குருவிநத்தம் கிராமத்தில் மருத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

குருவிநத்தம் கிராமத்தில் மருத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 


ADDED : ஜூலை 28, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: அதிரா பவுண்டேசன் சார்பில், குருவிநத்தம் கிராமத்தில், மகளிருக்கான அன்பின்வழி மருத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு, அதிரா பவுண்டேசன் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் வெங்கட், பக்தவத்சலம் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக கிருமாம்பாக்கம் அறுபடை மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் தாமோதரன், இயக்குநர் அருணாச்சலம்,  பாகூர் அரசு மருத்துவமனை டாக்டர் சாய்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு அன்பின்வழி மருத்துவம் குறித்துக் பேசினர்.  

குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி நல்லாசிரியர் வெற்றிவேல் ‘சமுதாயத்தில் பெண்களின் மாண்புகளும் அன்பின் பண்புகளும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். அதிரா பவுண்டேசன் புனிதா, சங்குமதி ஆகியோர் நன்றி கூறினர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us