ADDED : ஆக 07, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ‘தினமலர்’ எக்ஸ்போவில் லட்சுமிநாராயணா மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் ‘தினமலர்’ மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில், லட்சுமி நாராயணா மருத்துவமனை சார்பில் தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். மேலும், அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்தனர். அவசர உதவிக்காக கண்காட்சி அரங்கில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
