ADDED : ஏப் 28, 2026 08:32 PM
புதுச்சேரி: உழவர்கரையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி மேரி உழவர்கரையில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் நாளில், திருக்கல்யாண உற்சவம் நடப்பது வழக்கம்.
இந்தாண்டிற்கான திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை அமிர்த கணேச சிவாச்சார்யார் மற்றும் கோவில் அர்ச்சகர் லோகாபிராமன் ஆகியோர் நடத்தினர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
அதில் மேரி உழவர்கரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி துரைராஜன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
