/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
/
கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
ADDED : மே 26, 2024 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவுத் தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெண்டார்கர், சட்டசபையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அவருக்கு முதல்வர் ரங்கசாமி திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். அப்போது, அவர், முதல்வர், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை, புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடற்படையின் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தியக் கடற்படை தினத்தை புதுச்சேரியில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
சந்திப்பின்போது புதுச்சேரி தலைமைச் செயலர் சரத் சவுகான், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரவிக்குமார் திங்ரா, கடற்படை அதிகாரிகள் உடனிருந்தனர்.