/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தும் மெகா எக்ஸ்போ இன்று நிறைவு
/
தி டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தும் மெகா எக்ஸ்போ இன்று நிறைவு
தி டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தும் மெகா எக்ஸ்போ இன்று நிறைவு
தி டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தும் மெகா எக்ஸ்போ இன்று நிறைவு
ADDED : மார் 09, 2025 04:10 AM

புதுச்சேரி : தி டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தும், ஆட்டோமொபைல் துறையின் முக்கியமான பெயர்களை ஒன்றிணைக்கும், டைம்ஸ் ஆட்டோ மெகா எக்ஸ்போ 5வது பதிப்பு புதுச்சேரியில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி பழைய துறைமுகத்தில், துவங்கிய, டைம்ஸ் ஆட்டோ எக்ஸ்போவை, அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார். பின், டைம்ஸ் ஆட்டோ எக்ஸ்போவின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஆட்டோமொபைல் முன்னேற்றங்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்து எக்ஸ்போ நடத்துவதை அமைச்சர் பாராட்டினார். இரண்டாவது நாளாக, இன்று 9ம் தேதி, காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை எக்ஸ்போ நடக்கிறது. இதில், முன்னணி ஆட்டோ மொபைல் பிராண்டுகளின் அதிநவீன மாடல்களை காட்சி படுத்துகிறது.
அதில், மெர்சிடீஸ்-பென்ஸ், லெக்ஸஸ், ரேஞ்ச் ரோவர், ஆடி, இஸுசு, டொயோட்டா, ஹோண்டா, ஜீப், எம்.ஜி., சிட்ரோயென் ஆகிய முன்னணி கார் நிறுவனங்கள், தங்களின் புதிய மாடல்கள், புதிய தொழில் நுட்பங்களையும் காட்சி படுத்தின.
ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், மற்றும் வாகனம் வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வு அனுபவங்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. எக்ஸ்போவை பார்க்க, நுழைவு கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு தி டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு 7299030533 இந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.