/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மவுண்ட் பார்க் பள்ளியில் 9ம் தேதி ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதி தேர்வு
/
மவுண்ட் பார்க் பள்ளியில் 9ம் தேதி ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதி தேர்வு
மவுண்ட் பார்க் பள்ளியில் 9ம் தேதி ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதி தேர்வு
மவுண்ட் பார்க் பள்ளியில் 9ம் தேதி ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதி தேர்வு
ADDED : ஏப் 07, 2024 04:56 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீத கட்டண சலுகை பெறுவதற்கான ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு வரும் 9ம் தேதி நடக்கிறது.
தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்பு சேர்க்கையில் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டும், 25 பேருக்கு கல்வி, விடுதி, நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் 100 சதவீதமும், கல்வி கட்டணம் 100 சதவீதம் 50 பேருக்கு, 50 சதவீதம் 50 பேருக்கு, 25 சதவீதம் 50 பேருக்கு என மொத்தம் 175 மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
இதற்கான தகுதி தேர்வு வரும் 9ம் தேதி மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. முதல் தேர்வு காலை 10:30 மணிக்கும் இரண்டாவது தேர்வு பிற்பகல் 2:30 மணிக்கும் நடக்கிறது.
இதில் ஏதேனும் ஒரு தேர்வை எழுதினால் போதுமானது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
தேர்வுக்கான கால அளவு 120 நிமிடம். தமிழ் மற்றும் ஆங்கில பாட வினாக்கள் தலா 20, அறிவியல் மற்றும் கணக்கு பாட வினாக்கள் தலா 30 கேட்கப்படும்.
அரசு பொதுத்தேர்வு மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 175 மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் கட்டண சலுகை வழங்கப்படும். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் இருந்து மவுண்ட் பார்க் பள்ளிக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது. மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். தேர்வு குறித்த முழு விபரங்களை 75388 86105 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

