/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் திருபுவனை போலீசார் கவுரவிப்பு

ADDED : மே 10, 2024 12:50 AM

புதுச்சேரி: பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு திருபுவனை போலீசார் தலைவாழை இலை போட்டு விருந்து அளித்து கவுரவித்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 6ம் தேதி வெளியானது. பல அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்க திருபுவனை போலீசார் முடிவு செய்தனர்.
பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த 6 மாணவர்களை திருபுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்த சப்இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார், மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து, திருக்குறள் புத்தகம் மற்றும் நினைவு பரிசு வழங்கினர். அதைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்திலே மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்குதலைவாழை இலை போட்டு மதிய சைவவிருந்து அளித்தனர்.
அடிதடி பஞ்சாயத்து, கொலை, திருட்டு என பரபரப்பாக காணப்படும் போலீஸ் நிலையம், மாணவர்களுக்கு அளித்த விருந்து உபசரிப்பால் நெகிழ்ச்சியாக காட்சி அளித்தது.