வெற்றி பெற்ற சுயோச்சை வேட்பாளர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற
வெற்றி பெற்ற சுயோச்சை வேட்பாளர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற
ADDED : மே 04, 2026 05:21 PM
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அழகு (எ) அழகானந்தம், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் ரமேஷ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக என்.ஆர்.காங்., கட்சியில் போட்டியிட சீட் கேட்டு, மக்கள் பணியாற்றி வந்த அழகு (எ) அழகானந்தம், சீட் மறுக்கப் பட்டதால் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று ஓட்டு எண்ணிக்கையின் போது, முதல் சுற்றில் இருந்தே சுயேச்சை வேட்பாளர் அழகு முன்னிலை பெற்றார்.
பின், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலையில் இருந்து வந்த சுயேச்சை வேட்பாளர் அழகு, இறுதி சுற்று முடிவில் 14,633 ஓட்டுகள் பெற்று, என்.ஆர்.காங்., வேட்பாளர் ரமேஷ் விட 7004 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். என்.ஆர்.காங்., வேட்பாளர் ரமேஷ் தோல்வியடைந்தார். இதையடுத்து, வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம், வெற்றி சான்றிதழை பெறுவதற்கு முன்பாக, திலாஸ்பேட்டையில் உள்ள பழைய வீட்டில் இருந்த முதல்வர் ரங்கசாமியை மதியம் 12:50 மணிக்கு நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார். அதன் பிறகே, எம்.எல்.ஏ., வெற்றி சான்றிதழை பெற்று லாஸ்பேட்டை புறப்பட்டு சென்றார்.
