தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'மியாட்' சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் ஆலோசனை

'மியாட்' சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் ஆலோசனை

'மியாட்' சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் ஆலோசனை


ADDED : பிப் 24, 2025 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மற்றும் இருதயவியல் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

சென்னை மியாட் மருத்துவமனை சிறுநீரகவியல் நிபுணர் சஞ்சு உன்னிகிருஷ்ணன், இருதயவியல் நிபுணர் மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் கடலுார் ஆற்காட் மருத்துவமனையில் காலை 10:00 முதல் மதியம் 1.00 மணி வரையிலும், புதுச்சேரி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் உள்ள தி பாஷ் மருத்துவமனையில் மாலை 4:00 முதல், இரவு 7:00 மணி வரையிலும்ஆலோசனை வழங்கினர்.

டாக்டர் சஞ்சு உன்னிகிருஷ்ணன், சிறுநீரக கல், புரோஸ்டெட் கோளாறுகள், மாற்று அறுவை சிகிச்சை, பெண் சிறுநீரகவியல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கோலா நிறத்தில் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, சிறுநீர் பாதை கோளாறுகள், சிறுநீரக பகுதியில் வலி, விதைப்பையில் வலி, வீக்கம், அடிக்கடி நீர் கழித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

டாக்டர் மணிகண்டன், நெஞ்சு வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல், களைப்பு, கை, தாடை, கழுத்தில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், ஒழுங்கற்ற இதய துடிப்பு, கால்களில் வீக்கம், இருதய நோய், அதிக ரத்த அழுத்தம், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us