/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரத்திற்கு நள்ளிரவில் பஸ் 'கட்' புதுச்சேரியில் பயணிகள் பரிதவிப்பு
/
விழுப்புரத்திற்கு நள்ளிரவில் பஸ் 'கட்' புதுச்சேரியில் பயணிகள் பரிதவிப்பு
விழுப்புரத்திற்கு நள்ளிரவில் பஸ் 'கட்' புதுச்சேரியில் பயணிகள் பரிதவிப்பு
விழுப்புரத்திற்கு நள்ளிரவில் பஸ் 'கட்' புதுச்சேரியில் பயணிகள் பரிதவிப்பு
ADDED : மே 06, 2024 05:04 AM
புதுச்சேரி, : புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, விழுப்புரத்திற்கு நள்ளிரவில் பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரி பஸ் நிலையத்தை நாள்தோறும் பல் லாயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கிருந்து சென்னை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, பெங்களூரு, திருப்பதி உட்பட பல பகுதிகளுக்கு, ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், சென்னை, கடலுார் உள்ளிட்ட முக்கிய சில பகுதிகளுக்கு, இரவு முழுதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, விழுப்புரத்திற்கும், இரவு முழுதும் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால், சமீபகாலமாக, இரவு 12:00 மணிக்கு பிறகு, புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, விழுப்புரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. அதிகாலை 5:00 மணிக்கு பிறகே, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதனால், விழுப்புரம் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், நள்ளிரவில் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது, கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரங்களிலும், புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, விழுப்புரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பயணிகள் கூறுகையில், 'புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு, நள்ளிரவில் எப்போது வந்தாலும், விழுப்புரத்திற்கு பஸ்கள் இருக்கும். கடந்த சில வாரங்களாக, விழுப்புரத்திற்கு, நள்ளிரவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
இதனால், தொடர்ச்சியாக இரவு நேரங்களில் விழுப்புரம் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகிறோம். இரவு முழுதும் பஸ் நிலையத்தில் கண் விழித்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.