/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்தடையை போக்க அமைச்சர் ஆலோசனை
/
மின்தடையை போக்க அமைச்சர் ஆலோசனை
ADDED : மே 27, 2024 05:23 AM
திருக்கனுார்: குமராப்பாளையத்தில் தொடர் மின்தடையை உடன் சரி செய்ய மின்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரப்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட தொடர் மின்தடையை கண்டித்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
அப்போது, அவ்வழி யாக வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தொடர் மின்தடையை உடனடியாக சரி செய்யவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குமாரப் பாளையத்திற்கு நேற்று வந்த தொகுதி எம்.எல்.ஏ., வும் அமைச்சருமான நமச்சிவாயம், காட்டேரிக்குப்பம் மின்துறை இளநிலைப் பொறியாளர் ராஜேந்திரனை நேரில் அழைத்து மின்தடை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இப்பகுதியில் மின்பற்றாக்குறையை போக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், தொகுதி முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டு மென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

