ADDED : ஜூலை 27, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் அரியாங்குப்படம் வட்டார வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரியமாணிக்கம் அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாணிக் தீபக்கர், சவுந்தர்யா, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சபரி ராஜன், பொறுப்பு அதிகாரி பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி துறை மூலம் நெட்டப்பாக்கம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் தார் சாலைகள், சிமென்ட் களம், மகளிர் சுய உதவி குழுகளுக்கு புதிதாக கட்டடம் உள்ளிட்டவைகள் விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
