/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சதுப்பு நில நெல் ரகம் குறித்து தெற்காசிய மையத்தில் அமைச்சர் ஆய்வு
/
புதுச்சேரியில் சதுப்பு நில நெல் ரகம் குறித்து தெற்காசிய மையத்தில் அமைச்சர் ஆய்வு
புதுச்சேரியில் சதுப்பு நில நெல் ரகம் குறித்து தெற்காசிய மையத்தில் அமைச்சர் ஆய்வு
புதுச்சேரியில் சதுப்பு நில நெல் ரகம் குறித்து தெற்காசிய மையத்தில் அமைச்சர் ஆய்வு
ADDED : மார் 04, 2025 04:45 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சதுப்பு நில நெல் ரகங்கள் அறிமுகம் செய்வது சம்பந்தமாக தெற்காசிய மண்டல நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டின் லொஸ் பனோஸ், லாகுனாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. 17 நாடுகளில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்நிறுவனத்தின் தெற்காசிய ஆராய்ச்சி மண்டல நெல் ஆராய்ச்சி உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ளது. இந்த மையத்திற்கு அரசு முறை பயணமாக சென்ற புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார் நேற்று பார்வையிட்டார்.
அங்குள்ள நெல் விளைச்சல் அதிகரிப்பு குறித்த தொழில்நுட்பத்தை புதுச்சேரி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வதற்காக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். குறுகிய நாட்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் ரகங்கள், உப்பு தன்மையுடைய சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய நெல் ரகங்கள், நெல்லில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்தல் குறித்து கேட்டறிந்தார்.
அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கூடுவதாக சொல்லும் நிலையில், அதற்கு மாற்றாக உள்ள நெல் ரகங்களை தெற்காசிய மண்டல ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பட்டியலிட்டனர்.
அமைச்சர் தேனீஜெயக்குமார் கூறுகையில், 'நெல் உற்பத்தி அதிகரிப்பு தொழில்நுட்பத்தை புதுச்சேரி விவசாயிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மையத்தை ஏப்ரல் மாதத்தில் புதுச்சேரி விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.
இன்று 4ம் தேதி லக்னோவில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தை அமைச்சர் பார்வையிடுகிறார். கலந்துரையாடலில் வேளாண் அமைச்சரின் தனி செயலர் மனோகரன் உடனிருந்தார்.