அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சட்டசபையில் பொறுப்பு ஏற்பு
அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சட்டசபையில் பொறுப்பு ஏற்பு
ADDED : மே 29, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சட்டசபையில் உள்ள தனது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
16-வது புதுச்சேரி சட்டசபை அமைச்சராக கடந்த 13ம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டசபையில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை, முதல்வர் ரங்கசாமி இருக்கையில் அமர வைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை செயலர், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
