/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சாலை நடத்தாவிட்டால் இடத்தை கையகப்படுத்த முடிவு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

ADDED : ஆக 13, 2024 05:03 AM
புதுச்சேரி: தொழிற்சாலை நடத்தாவிட்டால் அரசே அந்த இடத்தை மீண்டும் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்
கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:
வெங்கடேசன்(பா.ஜ.,): பல மாநிலங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்துகின்றன. ஆனால் புதுச்சேரியில் ஒரு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு கூட அரசு ஏன் நடத்தவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்-: முதலீட்டாளர்களுக்கு வழங்க நிலம் தயாராக இருக்கின்றது. சேதராபட்டு, கரசூர் தொழிற்பேட்டை மாஸ்டர் பிளான் தயாரித்த பிறகு ஆய்வு செய்யப்படும்.
வெங்கடேசன்(பா.ஜ.,): நலிவடைந்த தொழிற்சாலைகள் பூட்டி கிடக்கின்றது. அவற்றை மீண்டும் இயக்க முடியுமா. அதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா.
அமைச்சர் நமச்சிவாயம்-: அது தனியார் தொழிற்சாலைகள் முதலீட்டை பொருத்தது. அவர் மார்க்கெட் மதிப்பீட்டை பொருத்தது. இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்கவேண்டியுள்ளது. மேலும் தொழிற்சாலை நடத்தாவிட்டால் அரசே அந்த இடத்தை மீண்டும் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. தொழிற்சாலைகளின் மின்பாக்கி, வணிக வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.