/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் விபத்தில் சிக்கும் ஊழியர்கள்; மருத்துவ செலவை அரசு ஏற்கும்; அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

ADDED : ஆக 08, 2024 02:16 AM
புதுச்சேரி : மின் விபத்தில் சிக்கும் ஊழியர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும் என மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாத்தில் அரசு கொறடா ஆறுமுகம் பேசுகையில், 'என் தொகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, மின்துறை ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். முத்திரைப்பாளையம் பகுதியில் மின்தடை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் மின்சாரம் தாக்கி இருவர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் அப்போலோ மருத்துவமனையில் ரூ. 8 லட்சம் செலவு செய்து சிகிச்சை பெற்றார். மற்றொருவர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று திரும்பினார். சக ஊழியர்கள் பண உதவி செய்து சிகிச்சை பெற்றனர். அரசு ஏதும் உதவி செய்யவில்லை. அதனால், இருவருக்கும் ஆன மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்.
நாஜிம்: எனது தொகுதியிலும் 6 மாதத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி, ஊழியர் கையை இழந்துள்ளார். அவருக்கும் நிதி உதவி அளிக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: இதற்கு முன்பும், எதிர்காலத்திலும் மின்துறையில் பணியின்போது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் ஊழியர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்.
சம்பத்: மின்துறை ஊழியர்கள் பணி ஆபத்தானது. அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டுவர வேண்டும் என, கூறினார்.